Kirjojen hintavertailu. Mukana 12 390 323 kirjaa ja 12 kauppaa.

Kirjahaku

Etsi kirjoja tekijän nimen, kirjan nimen tai ISBN:n perusteella.

7 kirjaa tekijältä Jayaraman Raghunathan

DOCTOR VAIGUNDAM KATHAIGAL Part 3

DOCTOR VAIGUNDAM KATHAIGAL Part 3

Jayaraman Raghunathan

Zero Degree Publishing
2023
pokkari
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தில் ஆறு பேருக்கு மேல் கேன்சரில் மடிந்ததால், இதையெல்லாம் பார்த்து, வலித்து, அலுத்துவிட்ட எனக்குமே உள்ள இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வடிகாலாக 'டாக்டர் வைகுண்டம்' என்னும் ஒரு கற்பனை ஆசாமியைத் தோற்றுவித்து எழுத ஆரம்பித்தேன். டாக்டர் வைகுண்டத்தை புத்திசாலியான, மிடுக்கான, நேர்மையான காசுக்கும் பதவிக்கும் அடிபணியாத கஷ்டங்களுக்குத் தோள் கொடுக்கும் மனிதநேயம் மிகுந்த மனிதராகச் சித்தரித்து எழுத எழுத, வைகுண்டம் நிஜமானவரா என்று பலரும் நம்பும் அளவுக்கு மனதைக் கவர்ந்தவரானார். இது என் எழுத்தால் ஏற்பட்டது என்னும் கர்வத்திற்கு இடமே இல்லை. சமூகத்தில் இதுபோன்ற ஓர் உண்மைத் தேவை இருப்பதுதான் காரணம் என்பது எவ்வித பாசாங்குகளும் இல்லாமல் எனக்குத் தெரிகிறது.
Oozhiperuvali

Oozhiperuvali

Jayaraman Raghunathan

Zero Degree Publishing
2024
nidottu
சில ஜப்பானிய விமானங்கள் நம் சென்னைத் துறைமுகத்தில் குண்டுகள் வீசிப்பறந்து சென்றது ஒரு நிகழ்ச்சி. அன்றைய அரசாங்க மொழியில் 'மிகச்சொல்ப சேதங்களே' ஏற்பட்டன என்பதுதான். ஆனால் அந்தச் சேதங்கள் சிலரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள்...? ஒரு சரித்திரச் சம்பவத்துக்கும் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது ஒரு சாட்சி இருக்கத்தான் செய்கிறது. சாட்சி என்பது நம்மைப்போல ஒரு மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லையே. அந்தச் சாட்சி காலங்காலமாக வானில் ஒளிரும் சந்திரனாகவோ நட்சத்திரப்பட்டாளமாகவோ அல்லது ஏன் பட்டப்பகல் சூரியனாகவோ கூட இருக்கலாம். ஆனால் இங்கே நாம் பார்க்கப்போவது ஒரு சரக்குக் கப்பல். ஸ்டீம் ஷிப் குறிஞ்சி என்னும் அந்தக் கப்பல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாற்பத்தி மூன்றில் சலனமின்றிப் பார்த்த சம்பவத்தின் தொடர்ச்சியை மீண்டும் 26 வருடங்களுக்குப்பிறகும் பார்க்க நேரும் கதைதான் இந்த 'ஊழிற்பெருவலி'. சரித்திரமே கதையாக இருக்கும் போது கதை என்று எழுதுவது எதை?