Kirjojen hintavertailu. Mukana 11 342 296 kirjaa ja 12 kauppaa.

Kirjahaku

Etsi kirjoja tekijän nimen, kirjan nimen tai ISBN:n perusteella.

4 kirjaa tekijältä R Abilash

Naveena Kadhal

Naveena Kadhal

R Abilash

Zero Degree Publishing
2023
pokkari
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் கல்யாணத்தில் கைகூடுவது லட்சியம், இன்று அது ஒரு கனவு. 'காதலித்துக் கட்டிக்கிட்டோம்' என்பது விரைவில் ஒரு பூமர் வாக்கியம் ஆகிவிடும். மின்சாரம் பாயும் சொல்லாடலாக இருந்த 'ஐ லவ் யூ' இன்று முகமனைப் போல அன்றாடம் சொல்லப்படுகிறது. மிகுதியாக அன்பு காட்டி, சிறிது கூட அதை நம்பத் தயங்குகிறோம். காதல் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் இந்த யுகத்தில் காதல் செய்வது எப்படி, வாழ்வின் தத்துவத்துடன் காதலின் தத்துவம் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது எனப் பேசும் நூல் இது.
Novel Ezhudhum Kalai

Novel Ezhudhum Kalai

R Abilash

Zero Degree Publishing
2024
nidottu
நாவல் எழுதுவது கிட்டத்தட்ட கடவுளின் பணிக்கு இணையானது. யார் நுழைந்தாலும் தொலைந்து போகிறபடி அமைந்த குழப்பமானதொரு ஊருக்குள் செல்வதைப் போன்றது ஒரு நாவலுக்குள் தொலைந்து போவது. அதற்குள் தொலைந்துபோக வாசகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியர் அதற்குள் தொலைந்துவிடலாகாது. இதற்கு யாரிடமும் இல்லாத ஒரு வரைபடம் அவரிடம் மட்டும் இருக்க வேண்டும். அதை இந்நாவல் தர முயல்கிறது. நாவல் எழுதுவது மிகமிக சுலபம். உங்களுடைய அன்றாட வாழ்க்கையின் தருணங்களை நாவலாக்கும் நோக்கில் எழுதும்போது. ஆனால் நாவலுக்குள் நீங்கள் ஒரு கதை, கதைக்களம், கதாபாத்திரங்கள், அவர்களுடைய உலகம், செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், எண்ண ஓட்டங்கள், மொழி என முற்றிலும் மற்றொரு சிக்கலான அந்நியமான உலகத்தையும் சிருஷ்டிக்க வேண்டும். இந்த இரண்டும் - அகமும் புறமும் இணையும்போதே - அது ஒரு நல்ல நாவலாகிறது. அதை செய்வது மிகமிக கடினம். அதை இந்நாவல் கற்றுத் தருகிறது. நீங்கள் உங்கள் முதல் நாவலை எழுதிப் பார்ப்பவரா, எழுதிப் பார்த்து தோற்றவரா, நாவலின் கலை நுணுக்கங்களை வாசித்தறிய விரும்பும் பொது வாசகரா உங்களுக்கான புத்தகம் இது.