Kirjojen hintavertailu. Mukana 11 244 527 kirjaa ja 12 kauppaa.

Kirjahaku

Etsi kirjoja tekijän nimen, kirjan nimen tai ISBN:n perusteella.

1000 tulosta hakusanalla N Chokkan

Pepsi Vetri Kadahi

Pepsi Vetri Kadahi

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில்நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின்னப் பாட்டில்களில் தொடங்கிப் பெரிய இயந்திரங்கள்வரை எல்லா வடிவங்களிலும் இவை கிடைக்கின்றன, கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. உண்மையில் இவை இரண்டும் சர்க்கரைத் தண்ணீர்தான். ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை, அதை இன்னும் சுவையாக்கும்படி பிரமாதமான விளம்பரம், எங்கும் கிடைக்கிற வசதி, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் பானங்களையும் இந்த நிறுவனங்களையும் பெரிய வெற்றிபெறச் செய்துள்ளன. பெப்ஸி நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்து அதன் வெற்றிக்கதையைச் சுவையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். மிகப் பெரிய வெற்றி பிராண்டாகிய கோக-கோலா-விலிருந்து பெப்ஸி தன்னை எப்படி வேறுபடுத்திக்கொண்டது, மக்களைக் கவர்ந்திழுத்துத் தனக்கென்று ஒரு சந்தையை எப்படி உருவாக்கிக்கொண்டது என்பவற்றையும் விளக்கமாகப் பேசுகிறது.
Coca Cola Vettrikadhai

Coca Cola Vettrikadhai

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில் நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின்ன பாட்டில்களில் தொடங்கிப் பெரிய இயந்திரங்கள்வரை எல்லா வடிவங்களிலும் இவை கிடைக்கின்றன, கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. உண்மையில் இவை இரண்டும் சர்க்கரைத் தண்ணீர்தான். ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை, அதை இன்னும் சுவையாக்கும்படி பிரமாதமான விளம்பரம், எங்கும் கிடைக்கிற வசதி, இவை எல்லாம் சேர்ந்து இந்தப் பானங்களையும் இந்த நிறுவனங்களையும் பெரிய வெற்றிபெறச் செய்துள்ளன. கோக-கோலா நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்து அதன் வெற்றிக்கதையைச் சுவையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். வெறும் சுவையூட்டிய தண்ணீருக்கு ஓர் உலகச் சந்தையைக் கோக-கோலா எப்படி உருவாக்கியது, பெப்ஸி-யின் தொடர்ந்த போட்டியை அது எப்படிச் சமாளித்து முன்னேறியது என்பவற்றையும் விளக்கமாகப் பேசுகிறது
KGB - Russia Ulavuthurayin Varalaru

KGB - Russia Ulavuthurayin Varalaru

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு ரிநிஙி என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் ரிநிஙியின் உண்மை வரலாறு அந்த சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் கேஜிபி என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்பட்டதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், கேஜிபி-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருந்தது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருந்தன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், சிமிகி, திஙிமி, ரிநிஙி எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்தச் சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்
Mind Maps

Mind Maps

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப்படும் எளிய வரைபடங்களை உலகெங்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளைச் சரியாகப் பதிவு செய்யவும், முறையாகத் திரும்பப்பெற்றுப் புரிந்து கொள்ளவும் உதவுகிற மிகச் சிறந்த உத்தி இது. அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ள வெற்றி உத்தியாகிய மைண்ட் மேப்ஸைக் கதைவடிவில் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிற இந்த நூலைப் படியுங்கள், பக்கத்தில் ஒரு பேனா, ஒரு வெள்ளைத் தாளை வைத்துக்கொள்ளுங்கள், ஒரு மணிநேரத்துக்குள் நீங்கள் உங்களுடைய முதல் மைண்ட் மேப்பை வரைந்திருப்பீர்கள், அதன்பிறகு, எதைப் படித்தாலும், எதைக் கேட்டாலும் மைண்ட் மேப்பாக மாற்ற முனைவீர்கள். ஏனெனில், மைண்ட் மேப் என்பது எங்கோ ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உத்தி இல்லை, நம்முடைய மனம் சிந்திக்கும் முறையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதனால் தான் நாம் அதை உடனடியாகப் பற்றிக்கொள்கிறோம், பயன்படுத்திப் பலன் பெறுகிறோம்.
Thervu Bayaththai Virattungal

Thervu Bayaththai Virattungal

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள். வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்லாமல் அவற்றைச் சமாளித்துச் சாதிக்கிறார்கள். ஆக, தேர்வு என்பது சிங்கமோ புலியோ இல்லை, எல்லா விஷயங்களிலும் ஒழுங்கோடு திட்டமிட்டுச் செயல்பட்டால், தேர்வுகளை நினைத்து அஞ்சாமல், நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டோம் என்கிற திருப்தியுடன் தேர்வு அறையிலிருந்து மகிழ்ச்சித் துள்ளலோடு வெளிவரலாம். அதற்கான எளிய வழிகளைக் கலகலப்பான மொழியில் விவரிக்கும் நூல் இது. 'சுட்டி விகடன்' இதழுடன் இணைப்பிதழாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற பயனுள்ள கையேடு. வாசியுங்கள், சாதியுங்கள், தேர்வு பயம் இனி இல்லை
Click

Click

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
'க்ளிக்' இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் 'க்ளிக்' அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் 'க்ளிக்', அதாவது, கச்சிதமான வெற்றி. பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான 'க்ளிக்' நமக்குத் தெரிகிறது. 'அசத்திட்டான்ய்யா' என்று அதை நினைத்து மகிழ்கிறோம். ஆனால், அந்த 'க்ளிக்' ஒலிக்குப் பின்னால் எத்தனை 'அடச்சே'கள் இருந்தனவோ? யாருக்குத் தெரியும்? உண்மையில் நாம் ஏங்கவேண்டியது அந்த 'க்ளிக்'குக்காக அல்ல, அதன் பின்னே இருக்கிற கதைக்காக. அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தோல்விகளை எப்படிச் சமாளித்தார்கள், சிறிய வெற்றிகளை எப்படிக் கொண்டாடினார்கள், அங்கிருந்து பெரிய வெற்றிக்கு எப்படி முன்னேறினார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நமக்கும் அதேமாதிரி சூழல் வரும்போது அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறலாம். பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் வந்த 'க்ளிக்'குகளை அலசி ஆராய்ந்து வெற்றிப்பாடங்களைக் கற்றுத்தரும் நூல் இது.
Ullankayil Shakesphere

Ullankayil Shakesphere

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற பதினேழு நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்களின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், சுவாரஸ்யமான கதைப் பின்னணியும் சுவையான காட்சி அமைப்புகளும் கவிதைபோன்ற அழகு நடையும்தான். இவற்றுள், கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து இந்தச் சுருக்கத்தைச் செய்துள்ளோம். இவை ஓர் ஆரம்பம்தானே தவிர, கண்டிப்பாக முழு நீள நாடகங்களுக்கு மாற்றாகிவிடாது. என்றாலும், ஷேக்ஸ்பியரை வாசிக்க விரும்புகிறவர்கள், முதல்கட்டமாக இதுபோன்ற சுருக்கங்களைப் படிக்கலாம். அதன்பிறகு, உங்களுக்கு சுவையாகத் தோன்றும் நாடகங்களின் மூலப் பிரதிகளைத் தேடி வாசிக்கலாம்.
Walt Disney Kadhai

Walt Disney Kadhai

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
மிக்கி மவுஸ் என்ற ஒரே பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற கலைஞர் வால்ட் டிஸ்னி. அதேசமயம், அவருடைய படைப்பாற்றலில் வந்துதித்த பாத்திரங்களைப் பல நாடுகள், பண்பாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இன்றைக்கும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையோடு அவர் உருவாக்கிய பொழுதுபோக்குப் பாதையில்தான் இப்போதைய டிஜிட்டல் உலகம்கூட நடைபோடுகிறது. வால்ட் டிஸ்னி வென்ற கதையைச் சுவையான நடையில் விவரிக்கிறது இந்நூல்.
Charlie Chaplin Kadhai

Charlie Chaplin Kadhai

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
சார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு. அவருடைய படங்களைப்போலவே, சார்லி சாப்ளினின் வாழ்க்கையிலும் சிரிப்பு, சோகம் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. அந்தக் கலவையை இந்த நூல் விறுவிறுப்பாகப் பதிவுசெய்கிறது.
Anbudai Nenjam

Anbudai Nenjam

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை ரசிப்பதுபோலவும் தோன்றும். நமது அன்புக்குரியவர்களை நினைக்கவைக்கும். சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் வரை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் எல்லாரும் ஒரே தரத்தில் எழுதுகிறார்கள் என்பது அர்த்தமில்லை. அதேசமயம், அன்பைப் பதிவுசெய்யும் மகிழ்ச்சியும், அதை ரசிக்கிற அனுபவமும் நமக்கு நிறையக் கிடைத்திருக்கிறது, அப்போதும் நம் மனம் நிறையாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கிறது. அதுவே அன்பின் இயல்பு. முக்கியமாக, இந்நூல் முழுக்க நிறைந்திருக்கும் காதலை வழங்கிய காதலர்களுக்கும், கவிஞர்களுக்கும், இனி காதலித்துக்கொண்டே இருக்கப்போகிற எல்லாருக்கும் நன்றி
Adutha Kattam

Adutha Kattam

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
உங்களுக்குக் கதை படிக்கப் பிடிக்குமா? புதிய விஷயங்கள், வெற்றி உத்திகளைக் கற்றுக்கொள்ளப் பிடிக்குமா? இந்த இரண்டும் ஒரே புத்தகத்தில் சேர்ந்து கிடைத்தால் எப்படியிருக்கும் 'அடுத்த கட்டம்', தமிழின் முதல் பிஸினஸ் நாவல். திறமையுள்ள, கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிற இளைஞர் ஒருவருடைய கதையைச் சொல்லி அதன்மூலம் நமக்குப் பல்வேறு விஷயங்களைச் சொல்லித்தருகிற புதுமையான படைப்பு. கதைபோலப் படிக்கலாம், பயனுள்ள உத்திகளைச் சுவையாகக் கற்றுக்கொள்ளலாம். குங்குமம் இதழில் தொடராக வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டைப் பெற்ற 'அடுத்த கட்டம்' பிஸினஸ் நாவல் உங்களுடைய வாழ்க்கையிலும் அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.