Kirjailija
Charu Nivedita
Kirjat ja teokset yhdessä paikassa: 56 kirjaa, julkaisuja vuosilta 2012-2023, suosituimpien joukossa Manam Kothi Paravai. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.
56 kirjaa
Kirjojen julkaisuhaarukka 2012-2023.
வாழ்வின் சாரத்தை அடியோடு உறிஞ்சி, நம்மையும் நம் உணர்ச்சிகளையும் அடிமைப்படுத்தும் உத்தியோகத்தையும் பணத்தையும் பெரிதென நினைக்கும் கூட்டத்தின் நடுவே வாழ்கிறோம். இவர்களுக்கு இடையிலிருந்துகொண்டு பார்க்கையில் எனக்கு உங்கள் பூச்சி தொடர் ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது. ஆன்மிகம் கூட ஒரு புள்ளிக்கு மேல் வியாபாரமாக மாறிவிடுகிறது; அப்படி மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. வெகுஜனக் கூட்டத்திலிருந்து அகதியாக வெளியேறுபவர்களுக்கு எழுத்தாளன் மட்டுமே தன் தோணியுடன் அவர்களை மறுகரைக்குக் கூட்டிச் செல்ல காத்துக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட அகதியாகிய எனக்கு உங்கள் தோணியில் இடம் கொடுத்ததற்கு நன்றி என்ற வார்த்தை போதாது. See things as they are. அது வாக்கியம் அல்ல, அறிவு அல்ல, ஒரு உணர்தல். அது உங்கள் பூச்சி தொடர் மூலம் எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கிறது. - கார்த்திக்
நம் முன்னோர் இயற்கையை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள். சூரியனை வணங்கினார்கள். காற்றை வணங்கினார்கள். பறவைகளை வணங்கினார்கள். பட்சியைப் பார்த்தால் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காகங்களுக்கு உணவிடாமல் தான் உண்ணாத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். மண்ணை வணங்கினார்கள். மண்ணை உதைத்தால் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார்கள். ஏ, பூமியே, உன்னை உதைக்கப் போகிறேன், என்னை மன்னித்துக் கொள் என்று சொல்வதற்காகத்தான் நடனமாடுபவர்கள் மேடையில் ஏறும் முன் மண்ணைத் தொட்டு வணங்கினார்கள். ஆனால் டை கட்டிக்கொண்டு இங்லீஷ் பேசிய மூடர்கள் இவர்களையெல்லாம் பார்த்துக் காட்டுமிராண்டிகள் என்றார்கள். இப்போது இயற்கை அவர்களைத் தீர்த்துக் கட்டுகிறது. தன்னை மதித்தவனின் மீது மட்டும் கொஞ்சம் கருணை காட்டுகிறது. - புத்தகத்திலிருந்து...
Anbu Oru Pinnaveenathuvavaathiyin Maruseeraivu Manu
Charu Nivedita
Zero Degree Publishing
2023
pokkari
இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல். இந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும். வளன் அரசு
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித 'புனைவுகளே'. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள். - அபிலாஷ் சந்திரன்
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி, ஒரே மதம், மற்ற மதங்கள் யாவும் கீழானவை என்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகின்ற ஒரு இருண்ட காலத்தில், அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளின் மூலம் நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா. பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் அலங்காரமான சொற்கள், மிகை வர்ணனைகள், நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும். ஆனால், பாரமற்ற வாக்கியங்கள், எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பைத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா. காலத்திற்கு எதிராக ஒரு சீரிய கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும்.
என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.
Every place is redolent with centuries-old sighs, tears, laughter, music, dance, hopes and aspirations, expectations of people who had once inhabited it and is waiting to whisper them into the ears of anyone willing to pay heed.
The on-screen offerings of Hollywood and Europe have colored the popular perspective of cinema- What it is and what it should be- to such a great extent that the filimic contributions of Latin American directors remain largely uncharted. This book, with its compelling insights, intends to put the stylistically groundbreaking, exceedingly true to life and aesthetically mesmerizing Latin American cinema on the map and establish it as the "Third Cinema".
என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால், சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.