Kirjojen hintavertailu. Mukana 12 595 353 kirjaa ja 12 kauppaa.

Kirjailija

Marudhan

Kirjat ja teokset yhdessä paikassa: 16 kirjaa, julkaisuja vuosilta 2006-2022, suosituimpien joukossa Hitler - 2014. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.

Mukana myös kirjoitusasut: ?????? Marudhan, Marudhan / ??????, ?????? / Marudhan, Marudhan /??????, Marudhan ??????, மருத& Marudhan

16 kirjaa

Kirjojen julkaisuhaarukka 2006-2022.

Ashokar / ??????

Ashokar / ??????

?????? Marudhan

New Horizon Media Pvt Ltd
2022
pokkari
அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே வரலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை ஒரு நவீன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டுகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத் திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம். நம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும் உரையாட விரும்பியதால்தான் தூண்களிலும் கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார் அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது, அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும் என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும் நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால் மட்டும் என்கிறார் அவர். அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம் என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.
Romila Thapar

Romila Thapar

?????? Marudhan

New Horizon Media Pvt Ltd
2022
pokkari
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாசிரியராக மட்டுமின்றி, பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்கிறார் அவர். எளிய கேள்விகளையும் விரித்து ஆழமாக விவாதிக்கிறார். வரலாறு என்றால் என்ன? அது எப்படி எழுதப்படவேண்டும்? நம் அடையாளம் என்ன? நம்மில் யார் ஆரியர்? யார் இந்தியர்? எது இந்திய மரபு? எது இந்தியப் பண்பாடு? இந்தியா இந்துக்களின் நிலமா? இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றா? வேதம், இதிகாசம், தொன்மம் ஆகியவற்றிலிருந்து வரலாற்றுத் தரவுகளை எவ்வாறு சேகரிப்பது? மதச்சார்பின்மை நமக்குத் தேவையா? ஆம் எனில் அது எப்படி இருக்கவேண்டும்? ரொமிலா தாப்பரின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் எளிய முறையில் அறிமுகப்படுத்துகிறார் மருதன். இன்றைய அரசியல் சூழல் ஏன் அச்சமூட்டக்கூடியதாக மாறி இருக்கிறது என்பதையும் அதிலிருந்து மீள நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் தாப்பரின் எழுத்துகள் வாயிலாக இந்நூல் ஆராய்கிறது
??????? ?????????????????? ??? / India Kandupidikkapatta Kathai

??????? ?????????????????? ??? / India Kandupidikkapatta Kathai

Marudhan ??????

New Horizon Media Pvt. Ltd.
2022
pokkari
அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
Kadal Payanangal

Kadal Payanangal

?????? Marudhan

NEW HORIZON MEDIA PRIVATE LIMITED
2017
nidottu
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.* மார்கோ போலோ* கொலம்பஸ். * வாஸ்கோ ட காமா. * சார்லஸ் டார்வின். * செங் ஹே. * மெகல்லன். * இபின் பதூதா. * பார்த்தலோமியா டயஸ். * ஜேம்ஸ் குக். * ஜான் கபோட். * வால்டர் ராலே. * சார்லஸ் பிபி. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் கதை. சுட்டி விகடனில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம்.
Lenin Mudhal Comrade

Lenin Mudhal Comrade

?????? Marudhan

NEW HORIZON MEDIA PRIVATE LIMITED
2007
nidottu
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை.இதுதான் விதி. லெனினின் வருகைக்கு முன்பு வரை. எத்தனையோ தேசங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை. காரணம், மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டி, வியூகம் வகுத்தவர் லெனின்.வெற்றிக்கு வித்திட்டவரும் அவர்தான். வீரமும் திகைப்பும் அதிரடிகளும், அடி ஆழத்தில் தேச நலன் என்கிற பொதுவான சிந்தனையோட்டமும் கொண்டது லெனினின் வாழ்க்கை. மருதனின் புலிப்பாய்ச்சல் மொழியில் லெனின் ஜிவத் துடிதுடிப்புடன் இன்னும் வாழ்கிறார். We do not have Soviet Russia today. And there is none to commemorate or celebrate the Russian Communist leaders who came after Lenin. Only two things remain: Communism as an ideology and the memory of the powerful and operational leader Lenin. Russia means tsar. And tsar means Russia. Only individuals come and go. The rule will not change. Whether you are beaten or kicked, tsar is the ruler. The Russians were given the right only to be submissive. Before the advent of Lenin, that was life and that was destiny. Many a nation has seen changes in the government. But history has not seen a revolution equal to the one effected under the leadership of Lenin. The reason was that people themselves descended into the streets and made the revolution possible by their unity. Lenin guided and arrayed them and paved the way for victory. Lenin's life was comprised of courage, surprises, sudden turns but the well-being of the country was the underlying thread of his thinking. In the language of Marudan which leaps like a tiger, Lenin lives with flesh and blood again.
Viduthalai Puligal / விடுதலைப் புலிகள்
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு. உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது. ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் பிச்சைக்காரன் - 23-04-10