Kirjojen hintavertailu. Mukana 12 126 171 kirjaa ja 12 kauppaa.

Kirjailija

Pa Raghavan

Kirjat ja teokset yhdessä paikassa: 40 kirjaa, julkaisuja vuosilta 2005-2023, suosituimpien joukossa Munnooru Vayadhu Pen. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.

Mukana myös kirjoitusasut: Pa. Raghavan

40 kirjaa

Kirjojen julkaisuhaarukka 2005-2023.

Erandam Ulaga Por

Erandam Ulaga Por

Pa Raghavan

Zero Degree Publishing
2023
nidottu
ஹிட்லர் என்கிற ஒரு மனிதனின் மண்ணாசைதான் தொடக்கப் புள்ளி. மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் வரைபடங்களில் மாற்றி வைத்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது முதல் ஹிட்லரின் மறைவுடன் அது முடிவுக்கு வந்தது வரையிலான சம்பவங்களைப் பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்நூல்.
Akkapporiyal

Akkapporiyal

Pa Raghavan

Zero Degree Publishing
2023
nidottu
வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் 'ஓப்பன் டிக்கெட்' பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது. விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது பெரிதல்ல. பல பிரச்னைகள் இன்றுவரை உயிருடன் இருப்பதை - பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் மெய்யாகியிருப்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள்.
Ponnaana Vaakku

Ponnaana Vaakku

Pa Raghavan

Zero Degree Publishing
2023
nidottu
பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் படிப்பினைகளையும் தருவதே இந்நூல் ஏழாண்டுகள் கழிந்த பின்பும் மறு பதிப்பு காண்பதன் ஒரே அர்த்தம். சர்வதேச அரசியல் விவகாரங்களை மட்டுமே எப்போதும் எழுதி வரும் பா. ராகவன் முதல் முறையாக இதில் தமிழ்நாட்டு அரசியலைத் தொட்டுத் துலக்கியபோது எழுந்த பரபரப்பும் ஆரவாரமும் இன்றும் நினைவுகூரப்படுபவை.
Sarvaadhikari

Sarvaadhikari

Pa Raghavan

Zero Degree Publishing
2023
nidottu
ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர். தேசத்தை - ஆட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல வழி நடத்தப் பார்த்தவர். இறுதியில் அவரே வளர்த்து ஆளாக்கிவிட்ட தீவிரவாத இயக்கங்களால் சூனியம் வைக்கப்பட்டு, வேறு வழியின்றி, ஆண்ட காலம் வரை அமெரிக்க அடிமையாக இருந்துவிட்டுப் போனார். ஆட்சிக்காலத்துக்குப் பிறகு தேசத்துரோக வழக்கு வரை போட்டுத் தாளித்துவிட்டார்கள். உயிர் தப்பி லண்டனுக்குச் சென்று பிறகு துபாயில் அடைக்கலமாகி, இறுதி மூச்சை அங்கே விட்டார். சர்வாதிகாரிகள் எப்படி உருவாகிறார்கள்? எந்தெந்தக் காரணிகள் அவர்களை உச்சத்துக்கு எடுத்துச் செல்கின்றன? எதில் தடுக்கி விழுகிறார்கள்? ஏன் மீள முடியாமலே போகிறது என்பதை முஷாரஃபின் வாழ்வைக் கொண்டு தெளிவாக அறிய முடியும்.
Icecream Bootham

Icecream Bootham

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம். எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது? விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல். கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கதை.
Pudhayal Theevu

Pudhayal Theevu

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
யாரும் போகாத ஒரு தீவில் நடைபெறும் தேச விரோதச் செயல் ஒன்றைத் தடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்யும் ஒரு சாகசச் சிறுவனின் கதை. கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளிவந்து, ஆயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நாவல்.
ETA(Euskadi Ta Askatasuna)

ETA(Euskadi Ta Askatasuna)

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
மத்தியக் கிழக்கில் ஓர் ஐ.எஸ் என்றால் ஐரோப்பியக் கண்டத்துக்கு ணிஜிகி. ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது சுதந்தரத்துக்காக. ஒருநாள், ஒரு வருடப் போராட்டமல்ல. 46 ஆண்டுகளாக நீளும் யுத்தம் அது. சுமார் ஆயிரம் படுகொலைகள், நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புச் சம்பவங்கள், கணக்கு வழக்கே இல்லாத ஆள் கடத்தல்கள். மார்க்சிய - லெனினிய சித்தாந்தப் பின்னணி. மாபெரும் போராளிப்படை. உலகமெங்கும் வலுவான நெட் ஒர்க். அச்சமூட்டும் இந்தப் பேரியக்கம் குறித்த எளிய அறிமுகம் இந்நூல்.
Lashkar-E-Taiba

Lashkar-E-Taiba

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 - மும்பை தாக்குதல்கள், 2019 - புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள இயக்கம் லஷ்கர். பாகிஸ்தானில் நிலைகொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல் புரியும் லஷ்கரைக் குறித்துத் தமிழில் வெளியாகும் முதல் நூல் இதுவே. சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான 'மாயவலை'யில் இது ஒரு பகுதியாக உள்ளது. வாசக விருப்பத்தின் அடிப்படையில் தனி நூலாக வெளிவருகிறது.
Om Shinrikyo

Om Shinrikyo

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எண்பதுகளில் இவரது இயக்கம் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிலும் ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இவருக்கு இருந்தார்கள். வழிபடும் தொண்டர்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் ஊரையே காலி பண்ணிவிடத் தயாராக இருந்த வெறிபிடித்த பக்தர்கள். ஊரையென்ன, உலகத்தையே. உண்மையில் அதைத்தான் தன் லட்சியமாகவும் அவர் கொண்டிருந்தார். ஜப்பானிய ௐ ஷின்ரிக்கியோ இயக்கத்தைக் குறித்துத் தமிழில் வெளிவந்துள்ள ஒரே நூல் இதுதான்.
Hezbollah

Hezbollah

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
லெபனானின் தெற்குப் பகுதி முழுவதையும் ஒரு காலத்தில் இஸ்ரேல் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தது. 2000ம் ஆண்டில்தான் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து விலகின. இஸ்ரேலியப் படைகளைத் துரத்துவது ஒன்றே குறியாகத் தோன்றிய இயக்கம்தான் ஹிஸ்புல்லா. வெறும் போராளி இயக்கமல்ல அது. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் சக்தியும் கூட. எந்தத் தீவிரவாத இயக்கம் தம் தேசத்துக் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன? விவசாயம் பெருகுவதற்காகத் தனிப்பட்ட விவசாய இயக்கங்கள் நடத்துகின்றன? பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன? இலவச மருத்துவமனைகள் நடத்துகின்றன? இப்படிப்பட்ட காரியங்கள் செய்யும் ஓர் இயக்கம் எப்படி ஆள் கடத்தும், விமானம் கடத்தும், படுகொலைகளை நிகழ்த்தும் என்று சந்தேகம் வரலாம். ஹிஸ்புல்லா இவற்றைச் செய்வதும் உண்மைதான். ஹிஸ்புல்லாவின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பின்னால் உள்ள காரணங்களை அப்பட்டமாக விவரிக்கிறது இந்நூல்.
Al-Qaeda

Al-Qaeda

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
அல் காயிதாவின் தோற்றம் முதல் ஆப்கன் யுத்தம் வரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் துல்லியமாகப் படம் பிடிக்கிறார் ஆசிரியர். அல் காயிதாவைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவும் ஒரே தமிழ் நூல் இதுதான். சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான 'மாயவலை'யில் இது ஒரு பகுதியாக உள்ளது. வாசக விருப்பத்தின் அடிப்படையில் தனி நூலாக வெளிவருகிறது.
Jama Islamia

Jama Islamia

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
ஜமா என்றால் கூட்டம் அல்லது குழு என்று சொல்லலாம். எளிமையான பொருள்தான். ஆனால் ஜமா இஸ்லாமியாவின் செயல்பாடுகளை, அதற்கான காரணங்களை, அவர்களது நெட் ஒர்க் பலத்தைப் புரிந்துகொள்வது அத்தனை எளிமையானதல்ல. ஒரு தோற்றத்தில் தனியொரு தீவிரவாத இயக்கம் போலவும், இன்னொரு தோற்றத்தில் மிகப்பெரிய இயக்கங்களின் பகுதி நேர ஃப்ராஞ்சைசீஸ் போலவும் தெரியும். எந்தக் காரியத்தைத் தங்கள் சொந்த முடிவின்பேரில் செய்கிறார்கள், எதை அடுத்தவர்களுக்காகச் செய்துகொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் தொடர்ந்து 'காரியங்கள்' செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில். நம்ப முடியாத அளவுக்கு ஆள் பலம். மிரட்டும் பொருளாதார பலம். உலகில் எந்த ஒரு நவீன ஆயுதம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டாலும் உடனடியாக ஒரு காப்பி இந்தோனேஷியாவுக்கு வந்துவிடும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆயுத பலம். சந்தேகமில்லாமல் ஆசிய நிலப்பரப்பின் அதி தீவிர இயக்கமான ஜமா இஸ்லாமியாவைப் புரிந்துகொள்ளத் தமிழில் உள்ள ஒரே நூல் இதுதான்.
Thodu Varmam

Thodu Varmam

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
பா. ராகவனின் இக்கட்டுரைகள் இன்றைய காலக்கட்டத்தின் பல நுட்பமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகின்றன. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாகக் கொதிநிலையை அணுகப் பார்க்கின்றன. ஆனால் எது ஒன்றையுமே அவர் தன் அனுபவத் தொடர்பின்றிப் பேசுவதில்லை. தனது சறுக்கல்களையும் அவமானங்களையும் ஏற்பட்ட சேதாரங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்த வெட்கப்படுவதும் இல்லை. முப்பதாண்டுகளாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வரும் பாரா, இன்றைய தலைமுறை வாசகர்களையும் ஈர்த்துத் தன்னருகே இருத்தி வைத்துக்கொண்டிருக்கும் காரணம் இதுதான். பா. ராகவனின் பதிமூன்று நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட அபுனைவு நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்றவர்.
Hamas

Hamas

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல். பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல 'ஹமாஸ்' வெளியாகவில்லை. இந்தப் பதிப்பே இதன் முதல் தனிப் பதிப்பாகும்.
Veetodu Mappillai

Veetodu Mappillai

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
மிக நிச்சயமாக இது நாவல் அல்ல. சிறுகதையோ, குறுநாவலோ, நெடுங்கதையோ கூட அல்ல. எனில் கட்டுரைத் தொகுப்பா, ஒரே பொருளில் அமைந்த நீண்ட கட்டுரையா, தன் வரலாறா என்பீரானால் மன்னிக்கவும். அதுவும் அல்ல. புழக்கத்தில் உள்ள எந்த ஓர் எழுத்து வடிவிலும் அடங்காத நூதனமே இதன் தனிச் சிறப்பு. தன் வரலாற்றுச் சாயலில் அமைந்த புனைவு என்றோ, கற்பனை கலந்த சுய சரிதமென்றோ சொல்லிக்கொள்ள விரும்பினால் உங்கள் இஷ்டம். ஆனால் ஓர் எழுத்தாளனைக் கதாநாயகனாக வைத்து சிரிக்கச் சிரிக்க எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பிரதி இதுதான். யார் கண்டது? உலக அளவிலேயேகூட முதலாக இருக்கலாம்.
Ukraina

Ukraina

Pa Raghavan

Zero Degree Publishing
2023
pokkari
தனது சரித்திரம் முழுதும் உக்ரைன் பல்வேறு தரப்புகளால் மிதி பட்டிருக்கிறது. அனைத்துக்கும் உச்சமாக சோவியத் யூனியனில் இருந்த காலத்தில் அத்தேசம் அனுபவித்த கொடுமைகள் சொல்லுந்தரமற்றது. சோவியத் என்னும் கட்டமைப்பு சிதறி, இதர தேசங்கள் தத்தமது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிய பின்பும் உக்ரைனின் விதி அதற்கு நிம்மதியைத் தருவதாக இல்லை. மீண்டும் இப்போது ஒரு ரஷ்யப் படையெடுப்பு. உக்ரைனின் பிரச்னைகளை, ரஷ்யப் படையெடுப்பின் காரணங்களை, உக்ரைனைப் பகடைக் காயாக வைத்து மேற்கு நாடுகள் ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தை இந்நூல் விவரிக்கிறது. உக்ரையீனா, 'மெட்ராஸ் பேப்பர்' இணைய வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.