Kirjojen hintavertailu. Mukana 12 595 353 kirjaa ja 12 kauppaa.

Kirjailija

Psv Kumarasamy

Kirjat ja teokset yhdessä paikassa: 4 kirjaa, julkaisuja vuosilta 2020-2021, suosituimpien joukossa On Meditation. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.

4 kirjaa

Kirjojen julkaisuhaarukka 2020-2021.

Deep Work

Deep Work

Cal Newport; Psv Kumarasamy

MANJUL PUBLISHING HOUSE PVT LTD
2021
nidottu
'கருமமே கண்ணாக' என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது. ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் - இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல் கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்..
The Gift

The Gift

Edith Eger; Psv Kumarasamy

MANJUL PUBLISHING HOUSE PVT LTD
2021
nidottu
சிறை உங்கள் மனத்தில் இருக்கிறது அதற்கான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது இறுதியில், நமக்கு என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல - அதைக் கொண்டு நாம் என்ன செய்யத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். வருத்தம், இழப்பு, பயம், கவலை, தோல்வி, மனச்சோர்வு போன்ற துன்பங்களை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம். ஆனால் கூடவே, தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமும் நமக்கு இருக்கிறது. ஒன்று, நாம் ஒரு துன்பத்தை எதிர்கொள்ளும்போது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து நம்முடைய முயற்சியைக் கைவிட்டுவிடலாம்; அல்லது ஒவ்வொரு கணமும் நமக்குக் கிடைத்துள்ள ஒரு பரிசு என்பதுபோல நாம் வாழலாம். நம்மைச் சிறைப்படுத்துகின்ற எண்ணங்களையும் நம்மை இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்ற அழிவுபூர்வமான நடத்தைகளையும் மாற்றுவதற்கு உதவக்கூடிய, நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய ஒரு கையேட்டை, பிரபல உளவியலாளரும் நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்தவருமான ஈடித் எகர் நமக்கு வழங்குகிறார். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் தன்னிடம் சிகிச்சை பெற்றுள்ளவர்களுடைய வாழ்க்கையிலும் நடைபெற்றச் சம்பவங்களை அவர் இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். உங்கள் வாழ்க்கையின் மிக இருண்ட கணங்கள்தாம் உங்களுடைய மாபெரும் ஆசான்கள் என்பதை நீங்கள் கண்டு கொள்ளவும், உங்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த வலிமையின் வாயிலாக சுதந்திரத்தை அடையவும் அவருடைய பாடங்கள் உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.
The Compound Effect

The Compound Effect

Darren Hardy; Psv Kumarasamy

MANJUL PUBLISHING HOUSE PVT LTD
2021
nidottu
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், br>ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. br>ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு விளைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். br>இன்றே உங்கள் வெற்றிபெற் பயணத்தைத் தொடங்குங்கள்.
On Meditation

On Meditation

Sri M; Psv Kumarasamy

MANJUL PUBLISHING HOUSE PVT LTD
2020
nidottu
Reading books is a kind of enjoyment. Reading books is a good habit. We bring you a different kinds of books. You can carry this book where ever you want. It is easy to carry. It can be an ideal gift to yourself and to your loved ones. Care instruction keep away from fire.