Kirjailija
T M C Ragunathan
Kirjat ja teokset yhdessä paikassa: 3 kirjaa, julkaisuja vuosilta 2025-2026, suosituimpien joukossa Kshanappitham. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.
3 kirjaa
Kirjojen julkaisuhaarukka 2025-2026.
'சேற்றில் மலர்ந்த செந்தாமரை'என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் யாவும் சிந்தனையைத் தூண்டி மனித வாழ்வை வளப்படுத்தும் வேட்கையைப் பிரதிபலிக்கும் கதைகளாகும். கதை எழுதுவ தென்பது ஆசிரியருக்குக் கைவந்த சரக்கு. ரகுநாதன் படைத்து விடும் பாத்திரங்கள் நம் உள்ளத்தை விட்டு நீங்குவதில்லை. உதாரணமாக, இந்தக் கதைத் தொகுதியில் வரும் டேவிட்ஸன் தெரு ரிக்ஷாக்காரன் நம்முன் எவ்வளவு மகத்தான பேருருவமாகக் காட்சியளிக்கிறான் 'பிச்சையா எடுக்கே'என்ற அவனது குரல் நம் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா? அதேபோல் காதல் பயின்ற மீனாட்சியையும், அவளது பரணி நட்சத்திரக் குழந்தையையும் மறந்து விடுவது என்பதும் நமக்குச் சுலபமான காரியம் அல்ல. ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு.சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் 'திருச்சிற்றம்பலக் கவிராயர்'என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய உலகில் ஒரு சிறப்பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன. இவரது 'பஞ்சும் பசியும்'என்ற நாவலே தமிழ் மொழியிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன்றில் (செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த நாவல் ஆசிரியர் ரகுநாதன் அவர்களின் கன்னி முயற்சி; முதல் நாவல். இளம் பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்திரிக்கும் இந்த நாவல் முதன்முதலாக வெளிவந்தபோதே, தமிழுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்பதை உணர்த்துவதாக அது அமைந்தது. அடுத்தடுத்துப் பல பதிப்புக்களைக் கண்டுள்ள இந்த நாவலை, எங்களது ரகுநாதன் நூல்கள் வரிசையில் மீண்டும் எங்களது பதிப்பாக வெளிக்கொணர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சாளரத்தின் ஓரத்தில் கிடந்த பெட்டியின் மீது அமர்ந்தவாறே, வானைப் பார்த்திருந்தேன். வானில் வெள்ளிப் படகுபோல, வளர்பிறை மிதந்து சென்று கொண்டிருந்தது. படகைச் சுற்றி வைடூரிய மணிகளைப் போல மினுங்கிக் கொண்டிருந்தன தாரகைகள். பூஞ்சோலையில் பூத்த வர்ணப் பூக்களைப் பார்வையிட்டவாறே செல்லும் ஒரு அரசகுமாரியைப் போல, மெதுவாக நடை பழகிச் சென்றது நிலவு. குதூகலத்தில் என்னையுமறியாமல், துள்ளிக் கொண்டிருந்த என் மனத்திற்கு, அது அழகான இன்பக் கனவுகளையெல்லாம் பெருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. அமைதியும் மகிழ்ச்சியும் மனத்தில் துளும்பிற்று. திடீரென ஒரு மேகம், கன்னங் கறுத்து, வெள்ளிப் படகை மூழகடிக்க வரும் பிரமாண்டமான அலை மாதிரி விரைந்து வந்தது.