Kirjojen hintavertailu. Mukana 12 390 323 kirjaa ja 12 kauppaa.

Kirjailija

N Chokkan

Kirjat ja teokset yhdessä paikassa: 92 kirjaa, julkaisuja vuosilta 2006-2024, suosituimpien joukossa Thervu Bayaththai Virattungal. Vertaile teosten hintoja ja tarkista saatavuus suomalaisista kirjakaupoista.

Mukana myös kirjoitusasut: N. Chokkan, N.Chokkan

92 kirjaa

Kirjojen julkaisuhaarukka 2006-2024.

Subhash Chandra Vaazhkai Varalaru

Subhash Chandra Vaazhkai Varalaru

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
இந்தியாவின் முதல் சாட்டிலைட் சேனலை உருவாக்கி அதை மிகப் பெரிய வணிகக் குழுமமாக வளர்த்த முன்னோடித் தொழிலதிபர் "ஜீ டிவி" (Zee TV) சுபாஷ் சந்திராவின் வெற்றிக்கதை இது. நம்முடைய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிறைவுசெய்தால் எப்பேர்ப்பட்ட வெற்றி வரும் என்பதைக் கண்முன்னால் நடத்திக்காண்பித்தவர் சுபாஷ் சந்திரா. அவர் துணிவோடு அமைத்த பாதையில்தான் இன்றைக்கு அத்தனை பொழுதுபோக்கு நிறுவனங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அவருடைய கனவுகளும் போராட்டமும் உழைப்பும் விடாமுயற்சியும் நமக்குப் பெரிய பாடங்கள்
Facebook

Facebook

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
இணையத்தின் #1 சமூக ஊடகம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறுப்பான வெற்றிக்கதை இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள் மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம், ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள், குழுக்கள், வீடியோக்கள், இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின்றன... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் சமூக உறவுகளை இப்படிப் புரட்டிப்போட்டதில்லை. ஃபேஸ்புக் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது? இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது? அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்? அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்? ஃபேஸ்புக்கின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ஃபேஸ்புக் பெற்றிருப்பது எப்படி? வருங்காலத்தில் ஃபேஸ்புக் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்? ... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், ஃபேஸ்புக்கின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள் கூகுள் வெற்றிக்கதை, ட்விட்டர் வெற்றிக்கதை
Ratan Tata

Ratan Tata

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும் ' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம். ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மதிப்பை உண்டாக்கித்தந்தவர் என ரத்தனுடைய பங்களிப்பு மிகப் பெரியது. யார் இந்த ரத்தன் டாடா? டாடா குடும்பத்தில் பிறந்ததாலேயே அவர் அந்நிறுவனத்தின் தலைவராகிவிட்டாரா? இத்தனைப் பெரிய சாதனைகளைப் புரிவதற்கான அடித்தளத்தை அவர் எப்படி உருவாக்கிக்கொண்டார்? நானோவைப்போல் அவர் அறிமுகப்படுத்திய, மாற்றியமைத்த புதுமைத் தயாரிப்புகள் என்னென்ன? இந்தியத் தொழில்துறைக்கு அவருடைய கொடைகள் என்னென்ன? அவருடைய வெற்றிக் கதையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சுவையான நடையில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனுடைய இந்தப் புத்தகம், ரத்தன் டாடா என்ற மனிதரை, மேலாளரை, தலைவரை, ஆளுமையைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
Nalla Tamizhil Ezudhuvom

Nalla Tamizhil Ezudhuvom

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான் பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் என்பதையெல்லாம் இந்த நூல் தெளிவாக விளக்குகிறது, அதட்டாமல், மிரட்டாமல் இலக்கணச் சூத்திரங்கள், இலக்கிய எடுத்துக்காட்டுகளில் தொடங்கித் திரைப் பாடல்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றின் வழியாக எளிமையாகவும் அழகாகவும் தமிழைக் கற்றுத்தருகிறது. என். சொக்கனின் சுவையான எழுத்தில் வெளியாகிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த நூல், இன்றைய தலைமுறைக்குத் தமிழை மிக எளிதாகவும் சிறப்பாகவும் அறிமுகப்படுத்துகிறது. வாங்கிப் படியுங்கள், தினமும் அரை மணி நேரம் போதும், சில நாட்களுக்குள் உங்கள் எழுத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
Google

Google

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் போட்டோஸில் அமர்ந்திருக்கின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, கல்வி என அனைத்துக்கும் யூட்யூபைச் சார்ந்திருக்கிறோம். ஈமெயில் என்றாலே ஜிமெயில்தான் என்றாகிவிட்டது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் ஒட்டுமொத்த உலகத்தையும் இப்படி வளைத்துப்போட்டதில்லை. கூகுள் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது? இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது? அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்? அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்? கூகுளின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை கூகுள் பெற்றிருப்பது எப்படி? வருங்காலத்தில் கூகுள் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்? ... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், கூகுளின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள் ஃபேஸ்புக் வெற்றிக்கதை, ட்விட்டர் வெற்றிக்கதை
Bill Gates

Bill Gates

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
இன்றைக்குக் கம்ப்யூட்டரை, செல்ஃபோனை, மின்னஞ்சலை, இணையத்தைப் பயன்படுத்துகிற எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் பில் கேட்ஸுக்குக் கடமைப்பட்டவர்கள்தான். இப்போது நாம் அனுபவிக்கிற டிஜிட்டல் புரட்சிக்கான தொடக்கப்புள்ளியை அவர்தான் எழுதினார். இத்தனைக்கும், பில் கேட்ஸ் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே இருந்தவற்றைக் கூர்ந்து கவனித்தார், அவை எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று ஊகித்தார், சில நேரங்களில், அவை எப்படி மாறவேண்டும் என்று அவரே கற்பனை செய்து தீர்மானித்தார், அந்தப் பாதையில் தன்னுடைய நிறுவனத்தை வழிநடத்தினார், உலகமும் கூடவே வந்தது. பில் கேட்ஸைப்போல் இந்தத் துறைக்குப் பங்களித்தவர்கள் மிகப் பலர் உண்டு. ஆனால், ஒரு சிறிய வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த இந்தத் துறையை மிகப் பெரிய வட்டத்துக்குள் கொண்டுவந்து, பின்னர் அந்த வட்டத்துக்குள் உலகத்தையே உட்காரவைத்த சாதனை பில் கேட்ஸுடையது. சிறந்த தொழிலதிபர், தொழில்நுட்பப் புள்ளி, சிந்தனையாளர், எழுத்தாளர், பணக்காரர், அந்தப் பணத்தில் பெரும்பகுதியை வாரி வழங்கி மகிழ்கிற மனிதர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட பில் கேட்ஸின் வாழ்க்கையை, வளர்ச்சியை, வெற்றியை, சாதனைகளை, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை எளிமையாகவும் ஆதாரபூர்வமாகவும் பதில் சொல்கிறது என். சொக்கனின் இந்த நூல்.
Elikkum Poonaikkum Thirumanam

Elikkum Poonaikkum Thirumanam

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
சிறுவர்களுக்கேற்ற எளிய, அழகிய, சின்னஞ்சிறிய தமிழ்க் கதைகள். ஊடகங்களில் சிறுவர்களுக்கான படைப்புகள் அனைத்திலும் ஆங்கிலக்கலப்பும் வன்முறையும் நம் சூழலுக்குப் பொருந்தாத பண்பாட்டுக் குறிப்புகளும் மிக இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், இக்கதைகள் நல்ல தமிழில், சுவையான நடையில் நம் வாழ்வியலை இயல்பாகச் சொல்லித்தருகின்றன. சிறுவர்களுடைய கற்பனையைத் தூண்டிவிட்டு மகிழ்விக்கின்றன. வாசிக்கத் தெரிந்த குழந்தைகளும், மற்றவர்களை வாசித்துக்காட்டச்சொல்லிக் கேட்கிற குழந்தைகளும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களும்கூட இக்கதைகளைக் கொண்டாடுவார்கள்.
FBI America Ulavuthuraiyin Varalaru

FBI America Ulavuthuraiyin Varalaru

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு FBI என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் திஙிமியின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் எஃப்.பி.ஐ. என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், எஃப்.பி.ஐ-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்த சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்
Irumbukkai Maayaavi

Irumbukkai Maayaavi

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர். ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை. தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர். குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார். ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம். சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்ப்பட்ட சாதனையாளர் என்பது புரியும். யார் இந்த லட்சுமி மிட்டல்? இந்தியாவில் பிறந்து, வளர்ந்த ஒருவர் உலகையே வளைத்துப்போட்டது எப்படி? மிகக் கடினமான இரும்புத் தொழிலில் அவர் வெற்றியடைந்தது எப்படி? நஷ்டம் தரும் நிறுவனங்களை லாபத்துக்குத் திருப்புவதற்கு அவர் பயன்படுத்திய உத்திகள் என்னென்ன? அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், இந்த இரும்புக் கை மாயாவியுடைய வாழ்க்கையிலிருந்து நாமும் ஊக்கம் பெறலாம்
Ambani - Oru Vetri Kathai

Ambani - Oru Vetri Kathai

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
ரிலையன்ஸ்' என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமொன்றை அமைத்து வெற்றிபெற்றவர். இந்தியாவின் தொழில் முகத்தையும் பல இந்தியர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைத்தவர். யார் இந்தத் திருபாய் அம்பானி. இப்படியொரு மிகப்பெரிய வெற்றி அவருக்கு எப்படிச் சாத்தியமானது? அம்பானியின் முழுமையான வாழ்க்கையைச் சுவையான நடையில் சொல்லுகிற இந்த சூப்பர் ஹிட் நூலைப் படியுங்கள்.
Napoleon

Napoleon

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, 'நம்மாளுதான் இவர்' என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம் முழுக்க எல்லாப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள். காரணம், வீரமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அவருடைய வாழ்க்கையுடன் யாரும் எளிதில் ஒன்றிவிடலாம், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். உலகெங்கும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிற நெப்போலியனுடைய வாழ்க்கையை விறுவிறுப்பான நடையில் நூலாக்கியிருக்கிறார் என். சொக்கன். பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்த நூல் இது.
Akbar

Akbar

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
சிறந்த போர் வீரர், மிக நல்ல நிர்வாகி, கனிவோடும் அன்போடும் அனைவரையும் அரவணைத்துச்செல்கிற ஒரு தலைவர், மனத்தைக் குறுக்கிக்கொள்ளாமல் விரிவாக்கிச் சிந்தித்த மனிதர், கல்வியை, கலைகளை ஆதரித்த அரசர், இந்திய வரலாற்றின் முதன்மையான ஆட்சியாளர்களில் ஒருவராக அக்பர் மாறியது இப்படிதான் மற்ற பல அரசர்களைப்போலவே, இவருடைய ஆட்சியும் குழப்பமான ஒரு சூழ்நிலையில்தான் தொடங்கியது. அதே நேரம், வாளையும் அன்பையும் சரியான சமநிலையோடு பயன்படுத்தித் தன்னுடைய ஆட்சி எல்லைகளையும் ஆதரவாளர்கள் கூட்டத்தையும் விரிவாக்கிக்கொள்ள அவரால் இயன்றது. தன்னுடைய கருத்துகள், நம்பிக்கைகளுடன் பொருந்திப்போகாதவர்களையும் ஆதரித்து அவர்கள் தரப்பைக் கேட்கும் பரந்த உள்ளம் அவருக்கு இருந்தது. தன்னைச் சுற்றித் திறமையாளர்களை நிரப்பிக்கொண்டும், அவர்களை நன்கு பயன்படுத்திக்கொண்டும் ஆட்சிபுரிந்தார். இந்தியாவில் முகலாய ஆட்சியை இன்னும் வலுவாக்கினார். அக்பரின் சுவையான வாழ்க்கையை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
Vaanam Nam Kaiyil

Vaanam Nam Kaiyil

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை. அறிவின் துணையோடு அவன் ஒரு கருவியை உருவாக்கிதான் பறக்கக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அந்த வியப்பூட்டும் முன்னேற்றத்தைச் சாதித்ததும், உலகமே மாறிவிட்டது, வாழ்க்கைமுறையும் மாறிவிட்டது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றிலும் பறத்தல் என்பது ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. மனிதன் பறக்கக் கற்றுக்கொண்ட கதையைச் சிறுவர்களுக்குச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்கிறது இந்த நூல். அத்துடன், முயற்சியும் முனைப்பும் கனவும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்றுத்தருகிறது.
William Shakesphere

William Shakesphere

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
Puli

Puli

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை. திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, 'இது இனிமே நம்மோடதான் இருக்கும்' என்கிறது, பெற்றோரைப் பதைபதைக்கவைக்கிறது. அந்தப் புலி எங்கிருந்து வந்தது? எங்கு செல்லப்போகிறது?
Twitter

Twitter

N Chokkan

Zero Degree Publishing
2023
nidottu
இணையத்தின் #1 தகவல் பரிமாற்றத் தளம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் விறுவிறுப்பான வெற்றிக்கதை இன்றைக்கு இணையதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிச் சேனல்களையெல்லாம்விட மிக விரைவாகச் செய்திகளை நமக்குக் கொண்டுவருகிற தளம், ட்விட்டர்தான். வெறும் செய்திகள்மட்டுமில்லை, வெவ்வேறு கோணங்களில் அதற்கான விமர்சனங்கள், பல்வேறு துறைச் சாதனையாளர்களுடைய கருத்துகள் என்று ட்விட்டர் தருகிற வாசிப்புச் சுகம் வேறெங்கும் நமக்குக் கிடைப்பதில்லை. இவை அனைத்தும் சில சொற்களுக்குள் எழுதப்படுகின்றன என்பதுதான் ட்விட்டரை இன்னும் சுவையான சமூக ஊடகமாக்குகிறது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் நம்முடைய சிந்தனையை, எழுத்தை, தகவல்களைப் பரிமாறிக்கொள்கிற விதத்தை இப்படி மாற்றியமைத்ததில்லை. ட்விட்டர் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது? இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது? அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்? அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்? ட்விட்டரின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ட்விட்டர் பெற்றிருப்பது எப்படி? வருங்காலத்தில் ட்விட்டர் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்? ... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், ட்விட்டரின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள் கூகுள் வெற்றிக்கதை, ஃபேஸ்புக் வெற்றிக்கதை
100 SUCCESS LESSONS FROM WARREN BUFFETT

100 SUCCESS LESSONS FROM WARREN BUFFETT

N Chokkan

Prabhat Prakashan
2023
nidottu
Warren Edward Buffett is a renowned American business magnate, investor and philanthropist. He is the chairman and CEO of Berkshire Hathaway. Also, known as the 'Oracle of Omaha', Buffett is one of the most successful investors in the world. He was born on 31st August 1930, in Omaha, Nebraska. Born to congressman Howard Buffett, Warren had a keen interest in business and investing from a young age. In this book, we are going to learn and understand lessons that helped Buffett become successful both in his professional and personal life. You will learn about how to do business, how to deal with customers, how to have a work-life balance, how confidence in oneself could change everything, how to deal with bad decisions, standards of living, the value of hard work, the power of habits and so much more. Hopefully, this book will serve as a guide to its readers so that they could bring about positive changes in their lives.
Michael Jackson

Michael Jackson

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
பாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான். அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் 'எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்' என்று வருந்தும்படியும் வாழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய சாதனைகளையும் சர்ச்சைகளையும் விறுவிறுப்பான நடையில் வழங்குகிறது இந்நூல்.
Bakthi Tamil

Bakthi Tamil

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
ஆழ்வார்களும் நால்வரும் கம்பரும் பிறரும் போற்றி வளர்த்த தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் பேரழகானவை. கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அன்பை, அவருடைய பேரரருளை எண்ணிய வியப்பை, உருக்கத்தை, மலைப்பை, அவர் படைத்த உயிர்களின்மீது பேரன்பை, இன்னும் பலப்பல உயர்ந்த உணர்வுகளை எழில்மிகுந்த தமிழில் சுவையாக வழங்கியிருக்கிறார்கள் நம் புலவர்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் இறைவனுக்குச் சூட்டும் ஒரு மலரைப்போல, அவற்றின் தொகுப்பு, இவ்வுலகின் மிகச் சிறந்த பாமாலை. தமிழின் மிக இனிமையான பக்திப் பாடல்களைத் தொகுத்து விரிவான, தெளிவான விளக்கங்களுடன் வழங்கும் நூல் இது, பக்கத்துக்குப் பக்கம், பாடலுக்குப் பாடல், வரிக்கு வரி மொழி அழகாலும் பக்திச் சிறப்பாலும் உங்களை நெகிழவைக்கும், இறையருளை நினைத்து வணங்கவைக்கும்.
Vettri Ettu Thikkum

Vettri Ettu Thikkum

N Chokkan

Zero Degree Publishing
2023
pokkari
வெற்றியை விரும்பாதவர்கள் யார் உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான். இதுபோல் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எங்கும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் கொஞ்சங்கொஞ்சமாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். அந்த வெற்றிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி சாத்தியமாகிறது. அப்படி ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிற வெற்றி வாய்ப்புகளையும், அவற்றை அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வதற்கான உத்திகளையும் இந்த நூல் எளிமையாகவும் அழகாகவும் விளக்குகிறது, நம்மை நிரந்தர வெற்றியாளர்களாக ஆக்குகிறது.